வீரபாண்டி கோயில் திருவிழா பைபாசில் அனுமதிக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2019 12:04
தேனி : வீரபாண்டி சித்திரை திருவிழாவின் போது பைபாஸ் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும், என காங்., வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் சங்கரநாராயணன், தேனி கலெக்டர் பல்லவி பல்தேவிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது: வீரபாண்டி கவுமாரியம்மன் சித்திரை திருவிழாவின் போது பைபாஸ் மூடுவதால் பொதுமக்கள், அனைத்து வாகனங்கள், அரசு பஸ்கள் 25 கி.மீ,. தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. பைபாஸ் உட்புறம் செல்வாக்கு படைத்தவர்கள் பாஸ் பெற்று கோயில் பகுதிக்குள் சென்று வருகின்றனர். அது பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது. விழா நடைபெறுவதற்கு தேவையான இடம் 2 கி.மீ., பைபாஸ் உட்புறமாகவே உள்ளது.
திருவிழாவின் போது ஒருவாரத்திற்கு பைபாஸை திறந்து விட்டு அதிலிருந்து உள்ளே செல்லும் ரோட்டில் வாகனங்களையும், போக்குவரத்துக்களையும் தடை செய்தால் பாதுகாப்பாகவும், பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்கும்.
\இதுகுறித்து கடந்த ஆண்டு நாங்கள் கொடுத்த கோரிக்கையில் கடைசி ஒரு நாள் பைபாஸ் திறந்து விட உத்தரவிட்டனர். எந்த சிரமும் இன்றி சிறப்பாக செயல்பட்டது. எனவே இந்த ஆண்டு திருவிழா ஆரம்பம் முதல் பைபாஸ் வழக்கம் போல் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.