பதிவு செய்த நாள்
01
மே
2019
02:05
பழநி : சென்னை பாதுகாப்பு படையினர், பழநி முருகன் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, பழநி முருகன் கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சோதனைக்கு பின், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப் படுகின்றனர்.நேற்று சென்னை பாதுகாப்புப்படை டி.எஸ்.பி., வசந்தன், மூன்று இன்ஸ்பெக்டர்கள் பழநி மலைக்கோவில் கிரிவீதி, கோயிலுக்கு செல்லும் நுழைவுப் பகுதிகள், பக்தர்கள் அதிகளவில் கூடும் ரோப்கார், வின்ச்ஸ்டேஷன்கள், அன்னதானக்கூடம், பஞ்சாமிர்த ஸ்டால்களில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு செய்தனர்.பாதுகாப்பு ஏற்பாடு கள் குறித்து இணை ஆணையர், செல்வராஜ் விளக்கினார். பின், திண்டுக்கல், எஸ்.பி., சக்திவேல் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.