திருப்புவனம்: திருப்புவனம் அழகிய மணவாள ரெங்கநாதபெருமாள் மழை வேண்டி நேற்று பச்சைப்பட்டில் கள்ளழகர் வேடம் பூண்டு வைகை நதியில் கால் பதித்தார்.
திருப்புவனத்தில் 130 வருடம் பழமை வாய்ந்த அழகிய மணவாள ரெங்கநாத பெருமாள் கோயில் உள்ளது. நேற்று காலை பெருமாளுக்கு கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. காலை 10:00 மணிக்கு கோயிலை விட்டு கிளம்பிய மணவாள பெருமாள் வைகை ஆற்றினுள் உள்ள மண்டகப்படியில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வேடத்தில் எழுந்தருளினார். பின் வைகை ஆற்றினுள் வலம் வந்த கள்ளழகர் நான்கு மாட வீதிகளையும் வலம் வந்து தி.புதுார் வரை சென்றார். கள்ளழகர் வேடம் பூண்டு வலம் வந்த பெருமாளுக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். மாலை ஆறு மணிக்கு கோயில் மண்டபத்தில் அழகிய மணவாள பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியிடன் பூப்பல்லக்கில் எழுந்தருளினார்.