பதிவு செய்த நாள்
02
மே
2019
03:05
கோத்தகிரி:கோத்தகிரி பில்லிக்கம்பை கோவில்மேடு சக்திமுனீஸ்வரர் கோவில் திருவிழா சிறப்பாக நடந்தது.
கடந்த, 22ம் தேதி காலை, 9:15 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 28 நள்ளிரவு, 12:00 மணிக்கு, சக்தி அழைப்பு மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. 29 காலை, 11:00 மணிக்கு,
கங்கையில் இருந்து கரக ஊர்வலம், பகல், 2:00 மணிக்கு ஐயனுக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நேற்று முன்தினம் (ஏப்., 30ல்) காலை, 11:00 மணிக்கு, பொங்கல் பூஜையும், பகல், 12:00 மணிக்கு, ஐயனுக்கு சிறப்பு பூஜையும், தொடர்ந்து வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, கங்கையில் கரகம் சேர்க்கும் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.
விழாவில், பில்லிக்கம்பை சுற்றுவட்டார பகுதியில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வரும், 6ம் தேதி, மறுபூஜை நடக்கிறது.விழா ஏற்பாடுகளை,
முனீஸ்வரர் இளைஞர் சங்கம், மகளிர் மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.