பதிவு செய்த நாள்
02
மே
2019
04:05
ஈரோடு: சக்தி மாகாளியம்மன், மதுரை வீரன் கோவில் திருவிழா பூசாட்டுதலுடன் தொடங்கியது. ஈரோடு, வடபகுதியின் காவல் தெய்வங்களாக விளங்கும், ராஜாஜிபுரம் சக்தி
மாகாளியம்மன், மதுரை வீரன், கருப்பராயன், முனியப்பன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான
திருவிழா கடந்த மார்ச், 30ல், இரவு அம்மன் அழைத்து, பூசாட்டுதலுடன் தொடங்கியது. தினமும் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன. வரும், 8ல் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த
ஊர்வலம், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், நிகழ்ச்சியும் நடக்கிறது. இதில், அம்மன் புஷ்ப அலங்கரத்தில் அம்மன் பவனி வருகிறார். 9ல் காலை, 9:30 மணிக்கு மதுரை வீரன்
திருவீதியுலா, 10ல், வாண வேடிக்கை, 11ல் மாலை, கோவில் கரகம் ஆற்றில் விடுதல், மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. 12ல், மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. வேண்டுவோருக்கு வேண்டியதை கொடுக்கும் சக்தி மாகாளியம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள்
கலந்து கொண்டு அம்மன் அருள் பெற வேண்டும் என, திருவிழா கமிட்டியார் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.