மழை வேண்டி மாவிளக்கு பூஜை: பவானிசாகர் அருகே பெண்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2019 04:05
புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அடுத்துள்ள தொட்டம்பாளையம் கிராமத்தில், மாகாளியம் மன் கோவில் உள்ளது. இங்கு, சித்திரை திருவிழா நேற்று (மே., 1ல்) காலை, அபிஷேக பூஜையு டன் துவங்கியது.
பின்னர், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. மதியம், 200க்கும் மேற்பட்ட பெண்கள் தட்டில் பச்சரிசி மாவு மற்றும் பூஜை பொருட்கள் உள்ளிட்டவைகளை வைத்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்றனர். பின், மாகாளியம்மன் கோவில் திடலில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் மாவிளக்கு பூஜை நடந்தது.
அப்போது, மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.