பதிவு செய்த நாள்
02
மே
2019
04:05
மோகனூர்: ஆரியூர் செல்லாண்டியம்மன் கோவில் தூக்குத் தேர்த்திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
மோகனூர் அருகே, ஆரியூரில் செல்லாண்டியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் தூக்குத்தேர் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு விழா, கடந்த, 24ல்
துவங்கியது.
தினமும், சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நேற்று (மே., 1ல்) காலை, சுவாமி தேரில் ரதம் ஏற்றி, பக்தர்கள், தேரை தூக்கிச் சென்றனர். ஆரியூர், சிங்கயக்கவுண்ட புதூர், தோப்பூர், மோளக்கவுண்டன்புதூர், நெய்க்காரன்பட்டி, மூங்கில்பட்டி, புதுமாரப்பனூர், கொளத்தூர் ஆகிய பகுதிகளில், மாவிளக்கு பூஜை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, சுவாமி எல்லையோடும் நிகழ்ச்சி, தொடர்ந்து, மஞ்சள் நீராட்டு விழா, இரவு, 8:00 மணிக்கு, சுவாமி குடி புகுதல் நடந்தது.