பதிவு செய்த நாள்
04
மே
2019
11:05
பெ.நா.பாளையம் : ராமானுஜர் பிறந்து 1,002 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, பெரியநாயக்கன்பாளையத்தில், ஸ்ரீஎம்பெருமானார் தரிசன ஐக்கிய சபா சார்பில், கடந்த, 30ல் திருநட்சத்திர திருவிழா துவக்கப்பட்டது.
இன்று (4ம் தேதி) சேஷ வாகனத்திலும், நாளை (5ம் தேதி) பல்லக்கு சேவை, நாளை மறுதினம் (6ம் தேதி) அலங்கார பல்லக்கு.வரும்,7ம் தேதி சர்வ பூபால வாகனம், 8ம் தேதி விமான புறப்பாடு, 9ம் தேதி திருப்பள்ளியெழுச்சி, திருமஞ்சனம், விசேஷ ஆராதனை, ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் குதிரை தம்பிரான் பேரில் வீதியுலா, ஸ்ரீ ராமானுஜர் புஷ்ப பல்லக்கில் திருவீதியுலா என, விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து நாட்களும்வீதி பஜனை நடக்கும். நிறைவு நாளில், கந்தப்பொடி உற்சவம், நெய் தீப ஊர்வலம், ஊஞ்சல் சேவை ஆகியன நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.