பதிவு செய்த நாள்
04
மே
2019
02:05
உடுமலை: பூளவாடி முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா, வரும் 6ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. இரவு 9:00 மணிக்கு திருக்கம்பம் நடப்படுகிறது. வரும் 7ம் தேதி காலை, 10:00 மணிக்கு, கொடியேற்றம், பரிவட்டம், திருமஞ்சனம், தீர்த்தம் அம்மனுக்கு தீர்த்தம் செலுத்துதல், அம்மன் திருக்கல்யாண உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
மாவிளக்கு, பூவோடு எடுத்தல், அம்மன் திருக்கோவில்களுக்கு எழுந்தருளல் உட்பட நிகழ்ச்சிகள் வரும் 8ம் தேதியும், அம்மன் திருவீதியுலா, மஞ்சள் நீராடுதல், சக்திகும்பம் கங்கையில் விடுதல், 9ம் தேதியும் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.