பதிவு செய்த நாள்
04
மே
2019
02:05
திருப்பூர்: திருப்பூர், நல்லூர் - மகாமாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், ஸ்ரீ பேச்சியம்மன், செல்லாண்டியம்மன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த, 29ம் தேதி கிராமசாந்தியுடன் துவங்கியது.இம்மாதம், 1ம் தேதி பெண்கள் முளைப்பாலிகை எடுத்து ஊர்வலம் வந்தனர். கம்பம் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று (மே., 3ல்) நல்லூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில் இருந்து, 200 க்கும் அதிகமான பெண்கள் பால்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.பொங்கல் விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. வரும், 8ம் தேதி ஆறு கிராம மக்கள் மாவிளக்கு ஊர்வலம், மறு நாள் திருக்கல்யாணம் நடக்கிறது. 10ம் தேதி சுவாமி திருவீதி உலா, தீபாராதனையுடன் விழா நிறைவு பெறுகிறது.