ஊட்டி : ஊட்டி மூவுலகரசி அம்மன் தேர் திருவிழா, நாளை நடக்கிறது. விழாவையொட்டி, காலை, 8:30 மணிக்கு மகா கணபதிஹோமம், லட்சுமி ஹோமம், காலை, 9:30 மணிக்கு காசிவிஸ்வநாதர் ஆலயத்திலிருந்து நவகலச தீர்த்தம் பால் குடங்களுடன் கொண்டு வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 11:30 மணிக்கு மகா சிறப்பு அபிஷேகம், அம்மன் ஆலய உட்புறம் வலம்வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. பகல், 1:00 மணிக்கு, மகா தீபாராதனை அன்னதானம் நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 10ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.