பதிவு செய்த நாள்
04
மே
2019
03:05
ஊட்டி: காந்தள் குருசடி திருத்தல திருவிழாவில், கூட்டுபாடல் திருப்பலி நடந்தது.ஊட்டி, காந்தள் குருசடி திருத்தலம், தென்னகத்தில் கல்வாரி என்றழைக்கப்படுகிறது. தொன்மை
வாய்ந்த இந்த திருத்தலத்தின் திருவிழா நேற்று (மே., 3ல்) நடந்தது.
இதை தொடர்ந்து, காலை, 10:30 மணிக்கு நடந்த கூட்டுப்பாடல் சிறப்பு திருப்பலியை, ஊட்டி மறைமாவட்ட பிஷப் அமல்ராஜ் தலைமையேற்று நடத்தினார். இதில், உலக அமைதி,
சகோதரத்துவம் மேம்பட வேண்டும்; மனித நேயம் வளர வேண்டும், என்ற கருத்தை மையமாக வைத்து, அனைவரும் பிரார்த்தனை செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.