ஆர்.எஸ்.மங்கலம்:முக்கிய விழாவான எட்டாம் நாளில் தேர்பவனியை முன்னிட்டு வட்டார அதிபர் பங்குந்தந்தை கிளமென்ட் ராஜா, பாதிரியார் ஜெரோம் ஆகியோர் திருவிழா கூட்டு திருப்பலி நிறைவேற்றினர்.
அதன் தொடர்ச்சியாக தேர்பவனி விழா நேற்று முன்தினம் 2ல் இரவு நடைபெற்றது.மின் விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் மிக்கேல் ஆண்டவர், புனித சவேரியார், தேவமாதா வீதி உலா வந்து இறைமக்களுக்கு அருள் பாலித்தனர். முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற தேர்பவனியை வரவேற்கும் விதமாக வீடுகளின் முன்பு தெருக்களில் பெண்கள் கோலமிட்டனர். தொடர்ந்து நேற்று 3 ல்மாலை சர்ச்சில் சிறப்பு திருப்பலி நடைபெற்று, தேர்பவனிக்கு பின்பு கொடியிறக்கம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கிராமத்தினர் மற்றும் புதிய நண்பர்கள் இளைஞர் மன்றத்தினர் செய்திருந்தனர்.