பதிவு செய்த நாள்
04
மே
2019
03:05
பரமக்குடி:ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டநயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் வைகாசிவசந்தோற்ஸவவிழா மே 9 ல் கொடியேற்றத்துடன்
துவங்கவுள்ளது.
மூர்த்தி, தீர்த்தம், தலம் என பெருமை பெற்ற இக்கோயில் வசந்தோற்ஸவவிழாவில், மே 8 இரவு காப்புக்கட்டுதலும், மறுநாள் காலை 7:30 மணி முதல் 8:15 மணிக்குள் கொடியேற்றம், இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா நடக்கும்.
தொடர்ந்து தினமும் காலை, இரவு சுவாமி, அம்பாள் நந்தி, ஹம்ச,பூத, சிம்ம, இந்திர, யானை, கைலாச, கிளி, சேஷ, காமதேனு ஆகியவாகனங்களில் வீதியுலா வரவுள்ளார்.
முக்கிய நிகழ்வாக மே 14 ல் திருஞானசம்பந்தருக்கு திருமுலைப்பால்ஊட்டல் வைபவமும், மே 17 ல் காலை 8:00 மணி முதல் 9:00 மணிக்குள்தேரோட்டமும், மறுநாள் காலை தீர்த்தோத் சவமும் நடக்கிறது.மே 23 இரவு உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவடையும்.ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ராஜேஸ்வரிநாச்சியார்,திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் வைரவசுப்பிரமணியன் செய்து வருகின்றனர்.