மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருஞானசம்பந்தர் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2019 03:05
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வைகாசி வசந்த உற்ஸவம், திருஞானசம்பந்தர் சுவாமிகள் திருவிழா நடக்கிறது.
இணை கமிஷனர் நடராஜன் கூறியதாவது: வசந்த உற்ஸவத்தை முன்னிட்டு மே 9 முதல் 17 வரை பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி, அம்மன் தினமும் மாலை 6:00 மணிக்கு கோயிலில் இருந்து புதுமண்டபம் எழுந்தருளி, அங்கு பத்தியுலாத்துதல் தீபாராதனை முடிந்து நான்கு சித்திரை வீதிகளில் சுற்றி வந்து கோயில் சேத்தியாகும். மே 18 புதுமண்டபத்தில் எழுந்தருளி பகலில் தங்கி மாலையில் அபிஷேகம், தீபாராதனை முடிந்து சித்திரை வீதி சுற்றி வந்து கோயில் சேத்தியாகும்.
திருஞானசம்பந்தர் சுவாமிகள் விழா மே 19 முதல் 21 வரை நடக்கிறது. மே 21 காலை திருஞான சம்பந்தர் திருநட்சத்திரத்தன்று தங்கப்பல்லக்கில் சுவாமி எழுந்தருள்வார். 63 நாயன்மார்களின் நான்கு ஆவணி மூல வீதி புறப்பாடாகி, அன்று இரவு 8:00 மணிக்கு திருஞானசம்பந்தர் வெள்ளி கோரதத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் திருவீதி உலா நடக்கும். விழாக்களை முன்னிட்டு மே 9 முதல் 21 வரை உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம் இருக்காது என்றார்.