பதிவு செய்த நாள்
04
மே
2019
04:05
சென்னை: சென்னை, பாரிமுனையில் உள்ள, காளிகாம்பாள் கோவிலை நிர்வகிக்க, இடைக்கால, தக்கார் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய அறங்காவலர்கள் தேர்தலை, நவம்பருக்குள் முடிக்கவும், உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சென்னை, பாரிமுனை தம்புசெட்டி தெருவில், காளிகாம்பாள் கோவில் உள்ளது. விஸ்வகர்மா சமூகத்துக்கு சொந்தமான, இந்த கோவிலை, அறங்காவலர்கள் குழு நிர்வகித்து வருகிறது.
அறக்கட்டளை குழுவில், ஐந்து அறங்காவலர்கள் இருக்க வேண்டும். 216ல், அறங்காவலர்கள் குழு தேர்ந்தெடுக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு சென்றது. அப்போது, அறங்காவலர்கள் குழுவின் பதவி காலத்தை, மூன்றில் இருந்து, இரண்டு ஆண்டுகளாக குறைத்து, அரசு
உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், மணி ஆச்சாரி என்பவர், தாக்கல் செய்த மனு:கடந்தாண்டில் தயாரிக்கப்பட்ட, வாக்காளர்கள் பட்டியலின் அடிப்படையில், புதிதாக தேர்தல் நடத்த முடியாது. ஏனென்றால், பழைய வாக்காளர்கள் பட்டியல், ௨௦௧௯ மார்ச்சில் காலாவதியாகியது.
எனவே, புதிய வாக்காளர்கள் பட்டியலின் அடிப்படையில், தேர்தல் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டது.நீதிபதி, ஆர்.சுரேஷ்குமார் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர், பி.குமார், அறங்காவலர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர் விஜயன், அறநிலையத் துறை சார்பில், சிறப்பு பிளீடர் மகாராஜா ஆஜராகினர்.
வழக்கறிஞர்களின் வாதங்களுக்கு பின், நீதிபதி, ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு: அறங்காவலர்கள் பதவி காலம் குறித்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தற்போதைய நிலையில், அரசு உத்தரவில் கூறியுள்ளபடி, இரண்டு ஆண்டுகள் பதவி காலத்தை எடுத்துக் கொள்ளலாம். அதன்படி, தற்போதைய அறங்காவலர்கள், பதவியில் நீடிக்க முடியாது.
அதேநேரத்தில், புதிய அறங்காவலர்கள் பதவிக்கான தேர்தல், 219 செப்டம்பருக்கு பின் தான் நடத்த முடியும். புதியவர்கள் பதவியேற்கும் வரை, இடைப்பட்ட காலத்தில், கோவிலை நிர்வகிக்க, தக்கார் நியமிக்கப்பட வேண்டும்.
காளிகாம்பாள் கோவில் நிர்வாகத்தை கவனிக்க, தக்காராக, வழக்கறிஞர், எம்.பாஸ்கர் நியமிக்கப்படுகிறார். உதவி ஆணையர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை, கூடுதல் தக்காராக, அறநிலையத்துறை பரிந்துரைக்க வேண்டும். புதிய அறங்காவலர்கள் பதவியேற்கும் வரை, இருவரும், கோவில் நிர்வாகத்தை கவனிக்க வேண்டும்.அக்டோபர் இரண்டாவது வாரத்துக்கு முன், அறிவிப்பு வெளியிட்டு, நவ., ௧௫க்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும்.
நவ., 3 ம் தேதிக்குள், புதிய அறங்காவலர்கள் பதவிஏற்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தர விட்டுள்ளார்.