பதிவு செய்த நாள்
06
மே
2019
02:05
தொண்டாமுத்தூர் : பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், வரும், 8ம் தேதியும், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 11ம் தேதியும், மழை வேண்டி யாகம் நடக்கிறது.தமிழக அரசின், இந்து அறநிலையத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், மழை வேண்டி யாகம் நடத்த வேண்டும் என அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, முக்கிய கோவில்களில், மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டு வருகிறது. கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், வரும், 8ம் தேதியும், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 11ம் தேதியும் மழை வேண்டி யாகம் நடக்கிறது.