வடமதுரை:வடமதுரையில் வட்டார நாயுடு மகாஜன நலச்சங்கம், தமிழ்மாநில நாயுடு பேரவை சார்பில் யுகாதி விழா நேற்று நடந்தது.
மண்டல தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். முன்னாள் பேரூராட்சி தலைவர் பார்த்த சாரதி முன்னிலை வகித்தார். வட்டார செயலாளர் சங்கரராமனுஜம் வரவேற்றார். நாயுடு பேரவை மாநில நிறுவனர் கிருஷ்ணன், சட்ட ஆலோசகர் வேணுகோபால், ஒருங்கிணைப்பாளர் சுகுமார், இணை செயலாளர் குருசாமி மற்றும் பலர் பங்கேற்றனர். பல்வேறு போட்டிகள் நடந்தன.