திருவாடானை:தொண்டியில் உள்ள தூயசிந்தாதிரை ஆலய திருவிழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் (மே., 4ல்) இரவு 9:00 மணிக்கு தேர்பவனி நடந்தது. தூயசிந்தாதிரை அமர்ந்த தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.முன்னதாக நடந்த திருப்பலி யில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு ஆலயம் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.