ராஜபாளையம்:தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகதிருவிழா நேற்று (மே.,9ல்) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதை யொட்டி செயல் அலுவலர் மகேந்திரன், கோயில் அறங்காவலர் சாந்தகுமாரி நாச்சியார் முன்னிலையில் கொடி மரத்திற்கு மேளதாளங்கள் முழங்க பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை நடந்தது.தவம்பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு விழா துவங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் மே 17 அன்று நடைபெறுகிறது.