மேலூர்: மேலூர் கூத்தப்பன்பட்டி நாகம்மாள் கோயில் 28ம் ஆண்டு திருவிழா நேற்று துவங்கியது. பக்தர்கள் மந்தை கருப்பண்ண சுவாமி கோயிலில் இருந்து ஊர்வலமாக பூத்தட்டுகளை கோயிலுக்கு கொண்டு வந்தனர். அங்கு அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. இன்று (மே 10) வவ்வாத்தாள் குளத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுக்கின்றனர். மே 11ல் கோயிலில் கிடா வெட்டி பொங்கல் வைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது.இத்திருவிழாவிற்காக மே 12ல் நடக்கவிருந்த வடமஞ்சுவிரட்டுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.