பதிவு செய்த நாள்
11
மே
2019
01:05
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவம் மற்றும் அத்தி வரதர் வைபவம் துவங்க உள்ள நிலையில், கிழக்கு ராஜகோபுரத்தில் உள்ள கலசங்கள் சேதமடைந்திருப்பது, பக்தர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், 108 திவ்யதேசங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு, தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலில் உள்ள
இரண்டு ராஜகோபுரங்களில், மேற்கு ராஜகோபுரம், 96 அடி உயரம், 92.5 அடி அகலம் உடையது. கோவில் பின்புறமுள்ள கிழக்கு ராஜகோபுரம், 125 அடி உயரம், 99 அடி அகலம் உடையது. இதில், கிழக்கு ராஜகோபுரத்தில் உள்ள, 11 கலசங்களில் இரண்டு, சேதமடைந்துள்ளன. வரதர்கோவில், ஆண்டுதோறும் நடக்கும் வைகாசி பிரம்மோற்சவம் வரும், 17ல் துவங்க உள்ளது. இது தவிர, 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை, அனந்தசரஸ் புஷ்கரணியில் இருந்து அத்திகிரி வரதர் எழுந்தருளும் வைபவமும், ஜூலை , 1ல் நடைபெற உள்ளது. இந்நிலையில், சேத மடைந்த கலசத்தை மாற்றாமல் இருப்பது, பக்தர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.
இது குறித்து, கோ வில் உதவி ஆணையர், தியாகராஜன் கூறியதாவது: கிழக்கு ராஜகோபுரத்தில் சிதிலமடைந்துள்ள கலசங்கள், வைகாசி பிரம்மோற்சவம் மற்றும் அத்திவரதர் வைபவத்திற்குபின் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.