காஞ்சிபுரம்: யதோக்தகாரி பெருமாளின் அவதார திருநட்சத்திரமான சித்திரை புனர்பூசம் நட்சத்திரத்தையொட்டி, இக்கோவிலில், நேற்று காலை, உபய நாச்சியாருடன் பெருமாள், மங்களகிரியில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பின், சின்ன காஞ்சிபுரம் நான்கு மாட வீதி வலம் வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தார்.அங்கு சுவாமிக்கு அலங்கார திருமஞ்சனம் நடந்தது.