பதிவு செய்த நாள்
11
மே
2019
02:05
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்துக்கு, ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீ வராக மகா தேசிக சுவாமிகள் வருகை தந்தார்.புதிய பீடாதிபதியாக பொறுப்பேற்ற ஸ்ரீவராக மகா தேசிக சுவாமிகள், தமிழ்நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
தற்போது,கோவை பாதுகா சேவா சமிதி எனப்படும், பெரியநாயக்கன் பாளையத்தில்உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்துக்கு வருகை தந்துள்ளார். அவருக்கு பக்தர்கள், பூரண கும்ப மரியாதை அளித்தனர்.இவர், வரும், 18 ம் தேதி வரை ஆசிரமத்தில் தங்கி பக்தர்களுக்கு, அருளாசி வழங்குகிறார். தினமும், அடியார் வீடுகளுக்கு செல்கிறார்.
தினமும் காலை பிரசாதம் வழங்குதல், பாசுரங்களை பாராயணம் செய்தல், ஆராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆசிரமம் கோவை-மேட்டுப்பாளையம் சாலையில்
சாந்தி மேட்டில் உள்ளது.