பதிவு செய்த நாள்
11
மே
2019
02:05
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, கருப்பராயசுவாமி கோவிலில், சித்திரை திருவிழாவை யொட்டி, மரத்தேர் வெள்ளோட்டம் நேற்று (மே., 10ல்) நடந்தது.பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி அழகப்பா காலனி கருப்பராயசுவாமி கோவிலில், சித்திரை திருவிழா கடந்த மாதம், 23ம் தேதி திருவிழா சாட்டுதலுடன் துவங்கியது.
தொடர்ந்து, தீர்த்த குடம் எடுத்தல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.கடந்த, 8ம் தேதி காலை, 6:00 முதல், பொங்கல், மாவிளக்கு மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் (மே., 9ல்) கிராம சாந்தியும், காலை, 9:00 மணி முதல், திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடந்தது.
திருவிழாவையொட்டி புதியதாக தயார் செய்யப்பட்ட மரத்தேர் வெள்ளோட்டம் நேற்று (மே., 10ல்) நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக தேர் திருவீதியுலா நிகழ்ச்சி நடந்தது.