சாயல்குடி:சாயல்குடி அருகே கூராங்கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயில் பழமையும், புரதான சிறப்பும் பெற்றது.
இங்கு கடந்தாண்டு திருப்பணிகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடந்தது. இந்தாண்டிற்கான வருடாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மே 3 காலை 7 மணிக்கு கணபதி ஹோமத்துடன் முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. மே 9 இரவு 7:00 மணிக்கு தர்மமுனீஸ்வரர் புஷ்ப அலங்காரத்துடன் பச்சைப் பல்லக்கில் வெள்ளி கமலம், திரிசூலம், திருப்பாதுகைகளுடன் வேட்டை மார்க்கமாக குண்டாற்றுக்கு சென்று அங்கே துஷ்ட நிக்ரஹ சுத்த பரிபாலனம் செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது.அன்று இரவு வள்ளி திருமணம் நாடகமும், நேற்று (மே., 10ல்) காலையில் தர்மமுனீஸ்வரர் பரிவார தேவதைகளோடு குண்டாற்றில் தீர்த்தவாரியும், பக்தர்களின் பால்குடம், காவடி, அக்னிச்சட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன் பூஜைகளும் நடந்தது. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கூராங்கோட்டை தர்மமுனீஸ்வரர்கோயில் அறக்கட்டளை மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.