பதிவு செய்த நாள்
11
மே
2019
03:05
குளித்தலை: சின்ன ஆண்டார் தெருவில் உள்ள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. குளித்தலை அடுத்த, சின்ன ஆண்டார் தெருவில், விநாயகர் கோவில் உள்ளது. சமீபத்தில்
புனரமைக்கப்பட்ட இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று (மே., 10ல்) நடந்தது.
இதற்காக, நேற்று முன்தினம் (மே., 10ல்) காலை, கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்த குடங்களை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். மாலை யாக சாலையில் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து பூஜை செய்து, கும்பாபிஷேக பூஜை துவங்கியது. நேற்று (மே., 10ல்) காலை மூன்று கால பூஜை முடிந்து, 9:00 மணியளவில், கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் விழாவில் பங்கேற்றனர்.