பதிவு செய்த நாள்
11
மே
2019
03:05
திருவாரூர்: திருவாரூர் அருகே, முடிகொண்டானில் நேற்று, (மே., 10ல்)ஆலங்குடி சுவாமிகள் ஆராதனை விழா துவங்கியது.
திருவாரூர் அருகே, முடிகொண்டான், ஆலங்குடி சுவாமிகள் அதிஷ்டானத்தில், ஆண்டு தோறும் ஆராதனை மகோற்சவம் நடந்து வருகிறது.உபன்யாசம்: நடப்பு ஆண்டு விழா, நேற்று (மே., 10ல்) இரவு, 7:00 மணிக்கு, ஸ்ரீமத் பாகவத மகாத்மிய உபன்யாசத்துடன் துவங்கியது. வரும், 17ம் தேதி வரை, மாதவ சர்மா உபன்யாசம் செய்கிறார்.விழாவை ஒட்டி, இன்று காலை முதல், 16ம் தேதி வரை, தினமும், அதிஷ்டானத்தில், ஸ்ரீமத் பாகவத மூல பாராயணம், சதுர்வேத பாராயணம், அதிஷ்டான பூஜை நடக்கிறது. வரும், 17ம் தேதி காலை, 6:30 முதல், 9:30 மணி வரை, அதிஷ்டானத்தில், ஸ்ரீமத் பாகவத மூல பாராயணம், சதுர்வேத பாராயணம் பூர்த்தி, அதிஷ்டான பூஜைகள் நடக்கின்றன. அன்று காலை, 10:00 மணிக்கு, மண்டபத்தில் ஆராதனை ஆரம்பம் ஆகிறது. வீதியுலாமாலை, 4:00 மணிக்கு, ருக்மணி கல்யாணம், பிரவசனம்; மாலை, 6:00 மணிக்கு, சுவாமிகள் வீதியுலா நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு, மங்கள ஆரத்தியுடன், விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, ஆலங்குடி சுவாமிகள் ஆராதனா சபா டிரஸ்ட் அமைப்பினர் செய்துள்ளனர்.