பதிவு செய்த நாள்
11
மே
2019
04:05
நாமக்கல்: கொல்லிமலை, ஆரியூர்நாடு, மேல்கலிங்கம்பட்டியில் அமைந்துள்ள கணபதி, பாலமுருகர், பைரவர், கருப்பசாமி பணமேட்டு பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேகம், இன்று (மே., 10ல்) நடக்கிறது. ஏப்., 24ல் கணபதி ஹோமம் செய்து முகூர்த்தக்கால் நட்டு முளைப்பாரிகை விடப்பட்டது.
கடந்த, 8ல் புனித தீர்த்தம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. மாலை, வாஸ்து சாந்தி பூஜை, தொடர்ந்து யாகசாலை பிரவேசம் மற்றும் முதற்கால பூஜை நடந்தது. நேற்று முன்தினம் (மே., 9ல்) திருப்பள்ளியெழுச்சி, பூத சுத்தி இரண்டாம் கால யாகம், கோபுர கலசம் வைத்தல் நிகழ்ச்சி, மாலை மூன்றாம் கால யாகம். இன்று (மே., 11ல்) அதிகாலை நான்காம் கால ஹோமம், காலை, 8:00 மணிக்கு கடம் புறப்பாடு, 9:00 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி
கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர், பக்தர்கள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.