மல்லசமுத்திரம் கந்தசாமி கோவிலில் சஷ்டி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மே 2019 04:05
மல்லசமுத்திரம்: சஷ்டி தினத்தை முன்னிட்டு, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. மல்லசமுத்திரம் அடுத்த, காளிப்பட்டியில் கந்தசாமி முருகன் கோவில் உள்ளது.
விசேஷ தினங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். நேற்று, (மே., 10ல்)சித்திரை சஷ்டி தினத்தை முன்னிட்டு, மூலவருக்கு பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. பால், பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.