பதிவு செய்த நாள்
12
மே
2019
03:05
பழநி : பழநியில் வசந்த உற்சவ விழா என அழைக்கப்படும், வைகாசி விசாக திருவிழா, பெரியநாயகியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
பழநி வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம், பெரிய நாயகியம்மன் கோவிலில், கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவை முன்னிட்டு பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் கொடியேற்றத்தின் போது சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முக்கிய நிகழ்ச்சியாக, 17 இரவு, முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 18ல், வைகாசி விசாகத்தன்று பெரியநாயகியம்மன் கோவில் நான்கு ரத வீதிகளில், மாலை, 4:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.