சிங்கம்புணரி,:சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் ஐய்யனார் கோயில் வைகாசி விசாகத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி நேற்று பகல் 1:30 மணிக்கு பூரண புஷ்கலை உடனான சேவுகப்பெருமாள் ஐய்யனாருக்கு கிராமத்தார்கள் முன்னிலையில் காப்பு கட்டப்பட்டது. பகல் 2:00 மணிக்கு பிடாரி அம்மன் சன்னதி முன் உள்ள வெள்ளிக்கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. 2:30 மணிக்கு கோவில் தங்க கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. பத்து நாள் மண்டகப்படியாக நடக்கும் இத்திருவிழாவின் போது சுவாமி வாகனங்களில் வீதி உலா வருவார். மே 16 ம் தேதி திருக்கல்யாணமும், 17 ம் தேதி கழுவன் திருவிழாவும் நடக்கிறது. 20 ம் தேதி தேரோட்டமும், 21 ம் தேதி பூப்பல்லக்கு உற்ஸவமும் நடக்கிறது.