பதிவு செய்த நாள்
14
மே
2019
03:05
குளித்தலை: குளித்தலை அடுத்த, பணிக்கம்பட்டி மஹா மாரியம்மன்கோவில் திருவிழாவை யொட்டி, கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் பால்குடம், தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
முன்பாக, மேட்டுமருதூர் செல்லாண்டியம்மன், அங்காள பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், 200க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இரவு இரட்டை வாய்க்கால் படித்துறையில், அம்மனுக்கு கரகம் பாலித்தல் நிகழச்சி நடந்தது.
இன்று (மே., 14ல்) சுவாமிக்கு குட்டி காவு கொடுத்தல், மாலையில் அக்னிச் சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துதல், தொடர்ந்து கிடா வெட்டு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.