பதிவு செய்த நாள்
14
மே
2019
03:05
நாமக்கல்: நாமக்கல் நகரின் மைய பகுதியில், பிரசித்தி பெற்ற பலப்பட்டரை மாரியம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை, வைகாசி மாதங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தாண்டு திருவிழா, நேற்று சக்தி அழைத்தல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதையொட்டி பக்தர்கள், மோகனூர் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இன்று (மே., 14ல்) காலை, 6:00 மணிக்கு பூச்சாற்று விழா நடக்கிறது. 19ல் மறுகாப்பு கட்டுதல் நிகழ்ச்சி, 26ல் இரவு வடிசோறு மற்றும் மாவிளக்கு பூஜை நடக்கிறது.
27ல், காலை, 7:00 மணிக்கு அம்மனை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து முக்கிய பகுதி களுக்கு தூக்கி செல்வர். அதையொட்டி பக்தர்கள் அலகு குத்தி, அக்னி சட்டி ஏந்தி கோவிலுக்கு ஊர்வலமாக வந்து சுவாமி தரிசனம் செய்வர். 28ல், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி, அன்று இரவு வசந்தோற்சவம் நடக்கிறது. 29ல், மஞ்சள் நீர் உற்சவம் நிகழ்ச்சி, 30ல், கம்பம் பிடுங்கி கமலாலய குளத்தில் விடப்படுகிறது.
விழாவை முன்னிட்டு, தினசரி பகலில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, இரவு பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதிஉலா நடக்கிறது.