Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரை ஆதினம் மடத்தில் ஞானசம்பந்தர் ... காஞ்சிபுரம் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரத்துக்கு வரும் காவிரி நீர் அத்தி வரதர் வைபவத்திற்கு ஏற்பாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2019
03:05

காஞ்சிபுரம்: மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில், அத்தி வரதர் வைபவத்திற் காக வரும் பக்தர்களுக்கு, காவிரி நீரை, காஞ்சிபுரத்திற்கு கொண்டுவரும் பணி நடப்பதாக, நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்த சரஸ் குளத்தில் வீற்றுள்ள அத்தி வரதரை, 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை, வெளியே எடுக்கும் வைபவம் நடக்கிறது.ஜூலை, 1ல் இருந்து, 48 நாட்கள், பக்தர்களுக்கு, அத்தி வரதர் அருள்பாலிக்கவுள்ளார். 24 நாட்கள் சயன நிலையி லும், 24 நாட்கள் நின்ற கோலத்திலும் தரிசனம் அளிக்கவுள்ள இவரை காண, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதி மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.மக்கள் கூடும் இடங்கள், வாகன நிறுத்தங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தும் பணியை, நகராட்சி நிர்வாகம் கவனிக்கிறது.குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலை யில், வேலூர் மாவட்டம், திருப்பாற்கடல் பகுதியில் இருந்து காஞ்சிபுரத்திற்கு குடிநீர் வருகிறது. இந்நிலையில், அரக்கோணத்திற்கு வரும் காவிரி நீரை, திருப்பாற் கடல் வழியாக காஞ்சிபுரத்திற்கு கொண்டுவர, ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:தர்மபுரி கூட்டு குடிநீர் திட்டத்தில், அரக்கோணம் வரை காவிரி நீர் வருகிறது. அதிலிருந்து, திருப்பாற்கடல் பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்துடன் இணைத்து, அத்தி வரதர் வைபவத்திற்காக, காஞ்சிபுரத்திற்கு குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ஒரு நாளைக்கு, 20 லட்சம் லிட்டர் தண்ணீருக்கு அனுமதி கேட்கப் பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியம், அதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளது. அரசு ஒப்புதல் கிடைத்த பின், பணிகள் துவங்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாளுக்கு சீமந்த விழா ... மேலும்
 
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar