பதிவு செய்த நாள்
16
மே
2019
03:05
சென்னிமலை: சென்னிமலை, முருகன் கோவில் உண்டியல் நேற்று (மே., 15ல்) காலை திறக்கப்பட்டது. இதில், 44 லட்சத்து, 37 ஆயிரத்து, 651 ரூபாய் பக்தர்கள் காணிக்ககையாக செலுத்தியிருந்தனர். சென்னிமலை, முருகன் கோவில் உண்டியலில் கடந்த, 124 நாட்களுக்கு பின் நேற்று (மே., 15ல்) காலை பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்ததை திறந்து எண்ணினர். அதில், நிரந்தர உண்டியல் எட்டு மற்றும் தற்காலிக உண்டியல் இரண்டு, திருப்பணி உண்டியல் ஒன்று என, 11 உண்டியல் திறந்தனர்.
இதில், நிரந்தர உண்டியலில் ரொக்கம், 43 லட்சத்து, 19 ஆயிரத்து, 906 மற்றும் தங்கம், 170 கிராம், வெள்ளி இரண்டு கிலோ, 530 கிராம் இருந்தது. திருப்பணி உண்டியலில் ரொக்கம், ஒரு லட்சத்து, 17 ஆயிரத்து, 745 ரூபாய் இருந்தது. மொத்தமாக, 44 லட்சத்து, 37 ஆயிரத்து, 651 ரூபாய் இருந்தது. உண்டியல் திறப்பில், பண்ணாரி கோவில் துணை ஆணையர் பழனிக்குமார், தக்கார் நந்தகுமார், கோவில் செயல் அலுவலர் அருள்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் மற்றும் சென்னிமலை சுய உதவி குழு பெண்கள் காணிக்கை எண்ணும் பணியில் உதவி புரிந்தனர்.