ஈரோடு: மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா வரும், 22ல் நடக்கிறது. ஈரோடு, ரங்கம் பாளையத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் வைகாசி மாதம் பொங்கல் விழா நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா வரும், 20ல் பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. 21ல் தீர்த்தம் கொண்டு வருதல், 22ல் பொங்கல் விழா நடக்கிறது. 23ல் மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.