பழநியில் சண்முகாநதி முடிகாணிக்கை நிலையம்அருகே திறந்த வெளியில் கழிவுநீர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2019 03:05
பழநி:பழநி சண்முகாநதி முடிகாணிக்கை நிலையம் அருகேயுள்ள கழிப்பறை, குளியலறை கழிவுநீர் திறந்த வெளியில் செல்வதால், துர்நாற்றத்தினால் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பழநி முருகன்கோயிலுக்கு வரும் பக்தர்கள் புனித சண்முகாநதியில் நீராடி மலைக்கோயிலுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கோயில் சார்பில், முடிகாணிக்கை நிலையம் அருகே பக்தர்களுக்கு இலவச குளியல்அறை, கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
இந்நிலையில் கழிவுநீரை சேகரிக்கும் தொட்டி பராமரிப்பு இல்லாமல், நிரம்பி திறந்த வெளியில் கழிவுநீர் ஓடுகிறது. இதனால் பக்தர்கள் துர்நாற்றத்தினால் பாதிக்கப்படுகின்றனர். தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. கோயில்நிர்வாகம், கழிவுநீர் தேங்கும் தொட்டியை செப்பனிட்டு, திறந்தவெளியில் கழிவுநீர் செல்வதை தடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.