அருப்புக்கோட்டை அருகே வலம்பிறை கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2019 03:05
விருதுநகர்:அருப்புக்கோட்டை காளையார் கரிசல்குளம் வலம்பிறை காமாட்சியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (மே 18 ) காலை 6:00 மணிக்கு நடக்கிறது. நாளை (மே17 ) மங்கள இசை, தேவதா அனுக்ஞை, எஜமானர் அனுக்ஞை, விக்னேஷ்வரர் பூஜை மற்றும் தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகிறது.
18 அன்று கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீகால பைரவர் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.இதையொட்டி அதிகாலை 4:00 மணி முதல் 6:00 மணிக்குள் இரண்டாம் கால யாகசாலை பூஜை , மண்டப சாந்தி, கோபூஜை உள்ளிட்ட பூஜைகளை தொடர்ந்து மகா கும்பாபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெறுகிறது.