பதிவு செய்த நாள்
17
மே
2019
12:05
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்திலுள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில் நடந்த, ஹாரத்தி வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம் குட்டையூரை அடுத்த மாதேஸ்வரன் மலை அருகே ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளது. நேற்று காலை, 5:30 மணிக்கு ஹாரத்தி பூஜையும், அதைத் தொடர்ந்து, 6:00 மணிக்கு அபிஷேக பூஜையும் நடந்தது. பின்பு காலை, 8:00 மணி, மதியம், 12:00, மாலை, 6:00, இரவு, 8:00 மணிக்கு சிறப்பு ஹாரத்தி வழிபாடும் சிறப்பு பூஜைகளும் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, வழிபட்டனர். கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.சற்குரு சாய் சேவா சங்க நிர்வாகிகள் கூறுகையில்,கோவிலில் அன்றாடம் காலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மதியம், 2:00 மணிக்கு மீண்டும் அடைக்கப்படும்.மீண்டும், 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு, 8:00 மணிக்கு அடைக்கப்படும். எல்லா நாட்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.சற்குரு சாய் சேவா சங்கத்தின் சார்பில் அன்றாடம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் நுாறு பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது, என்றனர்.