பதிவு செய்த நாள்
17
மே
2019
01:05
பல்லடம்:அல்லாளபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின், நான்காம் ஆண்டுவிழா, பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலமாக நடந்தது.
பல்லடத்தை அடுத்த அல்லாளபுரத்தில், பூமிநீளா நாயகி சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலின், 4ம் ஆண்டு விழா, நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.அதிகாலை, 5:00 மணிக்கு, விநாயகர் ஹோமம், சுத்த புருசத்த ஹோமம், சுதர்சன் ஹோமம், உள்ளிட்டவற்றுடன், விழா துவங்கியது. தொடர்ந்து, திருமஞ்சனம், அபிேஷக அலங்கார பூஜைகள் நடந்தன. காலை, 10:00 மணிக்கு, வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது.பூமிநீளா நாயகி சமேதராக, சிறப்பு அலங்காரத்தில், வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற அனைவருக்கும், விழா கமிட்டியின் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது.