வீரட்டானேஸ்வரர் கோவிலில் உண்டியல் வசூல் ரூ. 3.56 லட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மே 2019 01:05
பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு, உண்டியல் காணிக்கையாக, 3.56 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு, நேற்று உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி துவங்கியது.கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன் தலைமையில் பணி துவங்கியது. ஆய்வாளர் ஜெயசித்ரா, சுபத்ரா, முன்னாள் அறங்காவலர் சபாபதி முன்னிலை வகித்தனர். பக்தர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். இதில் 3 லட்சத்து 56 ஆயிரத்து 444 ரூபாய் உண்டியல் மூலம் கோவிலுக்கு வருவாய் கிடைத்தது.