முடியனுார் திரவுபதி அம்மன் கோவிலில் 61 அடி உயர துாக்குத் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மே 2019 01:05
தியாகதுருகம்: முடியனூர் திரவுபதி அம்மன் கோவில் 61 அடி உயர துாக்குத் தேர் திருவிழா நடந்தது.தியாகதுருகம் அடுத்த முடியனுார் கிராமத்தில் நுாற்றாண்டு பழமையான திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் அலங்கரிக்கப்பட்ட 61 அடி உயர தேரை, பக்தர்கள் தோளில் துாக்கிச் செல்வது சிறப்பம்சமாகும்.இக்கோவிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 10ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் மூலவர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், மாலை நேரத்தில் மகாபாரத வரலாற்று பாடல் சொற்பொழிவும், இரவு சர்வ அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.நேற்று 8ம் நாள் உற்சவத்தையொட்டி, காலை 10:30 மணிக்கு பாஞ்சாலி அம்மன், அர்ஜுனர் உற்சவர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு 61 அடி உயர துாக்குத் தேரில் வைத்து சிறப்பு ஆராதனை நடந்தது.அதன்பின் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை தோளில் சுமந்து பக்திப் பரவசத்துடன் ஊர்வலமாக சென்றனர். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.இன்று 9ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு அரவான் களபலி நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடக்கிறது.