சிதம்பரம்: அண்ணமலை நகர் திருவேட்களம் கூத்தாண்டவர் கோவில், தேரோட்டம் நடந்தது. சிதம்பரம் அண்ணாமலை நகர் திருவேட்களம் கூத்தாண்டவர் கோவிலின், 120ம் ஆண்டு உற்வச விழா, கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
மகாபாரதம் படிக்கப்பட்டது. கடந்த 15ம் தேதி இரவு வான வேடிக்கையுடன் அரவாண் ஊர்வலம் நடந்தது.உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேர் உற்வசம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. கோவிலில் இருந்து அரவாண் தேரில் புறப்பட்டார். வாண வேடிக்கை, மேள தாளங்களுடன் தேர் முக்கிய வீதிகள் வழியாக பாசுபதேஸ்வரர் கோவிலை வலம் வந்தது. தேரோட்டத்தை தொடர்ந்து அரவாண் களப்பலி, காளி ஆட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. அண்ணாமலை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, மேள தாளம் முழங்க பிரம்மாண்டமான மாலைகள் எடுத்து வந்து அரவாணுக்கு அணிவித்து தரிசித்தனர்.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.