திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே பஞ்சந்தாங்கி கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோயிலில் மே 8ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.நாள்தோறும் மூலவர் பாலமுருகனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார்.
மே 18 (சனிக்கிழமை) வைகாசி விசாகத்தை முன்னிட்டு பால் காவடி, வேல், மயில் காவடி உள்ளிட்ட நேர்த்திக்கடன் பூஜைகள், அன்னதானம் நடக்கஉள்ளது.ஏற்பாடுகளை பஞ்சந்தாங்கி கிராம பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.