Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒரே கல்லில் 15 அடி ஆஞ்சநேயர் சிலை தெய்வமான வையம்பட்டி சிறுமி: தீராத நோய்களை தீர்க்கும் சக்தி தெய்வமான வையம்பட்டி சிறுமி: தீராத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளையார்கோவிலில் வைகாசி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
காளையார்கோவிலில் வைகாசி தேரோட்டம்

பதிவு செய்த நாள்

18 மே
2019
11:05

 சிவகங்கை: சிவகங்கை சமஸ்தானத்திற்கு உட்பட்ட காளையார்கோவில் சோமேஸ்வரர் சவுந்திரநாயகி ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க நேற்று வைகாசி தேரோட்டம் நடைபெற்றது.

இங்கு மே 9 ம் தேதி கொடியேற்றத்துடன் வைகாசி திருவிழா துவங்கியது. தினமும் சோமேஸ்வரர் சவுந்திரநாயகி அம்பாள் கேடகம், வெள்ளி ரிஷபம், குதிரை வாகனங்களில் வீதி உலா வந்தனர். ஒன்பதாம் திருவிழாவான நேற்று காலை 5:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களில் பெரிய தேரில் சோமேஸ்வரருடன் அம்பாள், சவுந்திரநாயகி அம்பாள் எழுந்தருளினர். சப்பரத்தில் விநாயகர் முன் செல்ல நேற்று காலை 9:45 மணிக்கு பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுக்க, நான்கு ரத வீதிகளை சுற்றி காலை 10:45 மணிக்கு நிலையை அடைந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று இரவு தேர் தடம் பார்த்தல் அதை தொடர்ந்து கேடக வாகனத்தில் சுவாமி அம்பாளுடன் வீதி உலா வந்தார். சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சரவணகணேசன், ஸ்தானிகம் காளீஸ்வர குருக்கள் உட்பட விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இன்று தீர்த்தவாரி உற்ஸவத்துடன் வைகாசி விழா நிறைவு பெறுகிறது. காளையார்கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar