திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் தீர்த்தவாரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2019 04:05
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் (மே., 18ல்) காலை 10:30 மணிக்கு தீர்த்தவாரி நடந்தது.
அதன்பின் ஆதிரெத்தினேஸ்வரர், பிரியாவிடை, சிநேகவல்லி அம்மனுடன் தெப்பகுளம் வடகரையில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.