முதுகுளத்தூர் சீலைக்காரி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2019 02:05
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி கிராமத்தில் உள்ள சீலைக்காரி அம்மன் கோவிலில் வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு கோவில் முன்னாள் தலைவர் வேல், ராமசந்திரன் தலைமையில் விளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. கோயில் பூஜாரி போஸ் ஏற்பாடுகளை செய்திருந்தார்.முதுகுளத்தூர் செல்வி அம்மன் கோவில் வைகாசி பவுர்ணமியை முன்னட்டு 108 விளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாட்டினை கோவில் மகளிர் மன்ற குழுவினர் செய்திருந்தனர்.