திருவண்ணாமலை: திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில் உள்ள லோபமாதா ஆகஸ்தியர் கோவிலில், மழை, உலக நன்மை, இயற்கை சீற்றங்களிலிருந்து காக்க, ஜீவ காருண்ய சிந்தனை ஓங்க வேண்டி மகா ருத்ர யாகம் நடந்தது. இதற்காக, சிறப்பு யாக சாலை பூஜை அமைக்கப்பட்டு, 1,008 மூலிகை பொருட்களை கொண்டு மகா ருத்ர யாகம் நடந்தது. பின்னர், கோவிலில் உள்ள லிங்கத்திற்கு பால், பன்னீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து யாக சாலையில் வைக்கப்பட்ட, புனித கலச நீரை கொண்டு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.