கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் வசந்த உற்சவம் நாளை துவங்கி 3 நாட்கள் நடக்கிறது.
கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் சுட்டெரிக்கும் கடும் கோடை வெப்பத்தின் தாக்கம் புராணங்களின் ரீதியாக மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் கடவுளுக்கும் உண்டு என நம்பப்படுகிறது.
கோடை வெயிலின் உக்கிரத்தை போக்கிடும் வகையிலான வசந்த உற்சவ வைபவம் கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நாளை 23ம் தேதி துவங்கி 25ம் தேதி வரை 3 நாட்கள் தினம் மாலை 5:00 முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது.
குளுமை தரும் வாசனை திரவியங்களால் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. மேலும், வாசனை தரும் 8 வகை பூக்களால் சிறப்பு அலங்காரமும், ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.
பெருமாள், தாயார் எழுந்தருளும் மண்டபத்தினை குளுமை தரும் வெட்டி வேரினாலான பந்தல் அமைத்து வசந்த உற்சவ பூஜைகள் நடத்தப்படுகிறது.